நீர்க்குடம் ஆவணப்படம் Neerkudam Documentary Film
நீர்க்குடம் ஆவணப்படம் நீலகிரியின் நீருக்கான ஆதாரங்களான மலைகளையும், மலை சார்ந்த அடர்ந்த காடுகளையும், அதை ஒட்டி உள்ள சதுப்பு நிலங்களையும் , அதன் அத்யாவசியத்தையும், அவை அழிந்து வருவதையும், அதை அழித்து வரும் அதிகார வர்க்கம் செய்து வரும் அசிங்கமான அரசியலையும், அதற்கு துணை நிற்கும் இந்திய, தமிழக ஆட்சியாளர்களின் கேவலமான செயல் திட்டங்களையும் அலசி ஆராய்ந்து அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த நீர்க்குடம். இவை தவிர, சாமானிய மக்கள், எப்படியெல்லாம் நீர் நிலைகளின் அவசியம் கருதாமல் அதை வீணடிக்கிறார்கள் என்பதையும் மூஞ்சியில் அரைந்ததைப்போல் கூறியுள்ளது. மலையகத்தின் பூர்வகுடி ஆதிவாசிகள் எப்படி நீருக்காக போராடுகிறார்கள் என்பதையும், அவர்களின் வாழ்வாதாரம் எப்படி கேள்விக்குறியாக உள்ளது என்பதையும் பதிந்துள்ளது இந்த ஆவணப்படம். அடுத்த மூன்றாம் உலகப்போர் நீருக்கானது என்பதை ஆணித்தரமாக உரைக்கிறது இந்த பதிவு. காவிரிக்கான உரிமைப்போர் தொடங்கிவிட்ட தக்க தருணத்தில் இப்படம் வெளிடப்பட்டுள்ளது. தண்ணீரைப்பற்றிய புரிதலை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய அவசியமும், தேவையும் நமக்கு உள்ளது என்பதை உரைக்கிறது.
₹320.00
நீர்க்குடம் ஆவணப்படம் நீலகிரியின் நீருக்கான ஆதாரங்களான மலைகளையும், மலை சார்ந்த அடர்ந்த காடுகளையும், அதை ஒட்டி உள்ள சதுப்பு நிலங்களையும் , அதன் அத்யாவசியத்தையும், அவை அழிந்து வருவதையும், அதை அழித்து வரும் அதிகார வர்க்கம் செய்து வரும் அசிங்கமான அரசியலையும், அதற்கு துணை நிற்கும் இந்திய, தமிழக ஆட்சியாளர்களின் கேவலமான செயல் திட்டங்களையும் அலசி ஆராய்ந்து அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த நீர்க்குடம். இவை தவிர, சாமானிய மக்கள், எப்படியெல்லாம் நீர் நிலைகளின் அவசியம் கருதாமல் அதை வீணடிக்கிறார்கள் என்பதையும் மூஞ்சியில் அரைந்ததைப்போல் கூறியுள்ளது. மலையகத்தின் பூர்வகுடி ஆதிவாசிகள் எப்படி நீருக்காக போராடுகிறார்கள் என்பதையும், அவர்களின் வாழ்வாதாரம் எப்படி கேள்விக்குறியாக உள்ளது என்பதையும் பதிந்துள்ளது இந்த ஆவணப்படம். அடுத்த மூன்றாம் உலகப்போர் நீருக்கானது என்பதை ஆணித்தரமாக உரைக்கிறது இந்த பதிவு. காவிரிக்கான உரிமைப்போர் தொடங்கிவிட்ட தக்க தருணத்தில் இப்படம் வெளிடப்பட்டுள்ளது. தண்ணீரைப்பற்றிய புரிதலை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய அவசியமும், தேவையும் நமக்கு உள்ளது என்பதை உரைக்கிறது. முடிந்தவரை அதிகப்படியான இடங்களில் திரையிடுவோம். ‘நீர்க்குடம்’ வேண்டும் தோழமைகள் அண்ணனை தொடர்பு கொள்ளவும்.
இப்படி ஒரு விடயத்தை ஆவணப்படுத்திய இயக்குனர் அண்ணன் தவமுதல்வன் அவர்களுக்கும், இணை இயக்குனர் தோழர் கண்ணன் ராமையா அவர்களுக்கும், நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
User Reviews
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.