Best seller
Ennangal Oru Kannadi
@ Glomikart Ask owner
உள்மனதில் கரைபுரண்டோடும் எண்ணங்களே வாழ்வின் புறத்தில் கட்புலனாகும் வண்ணங்களாய் வெளிப்படுகின்றன. இந்த எண்ணங்களே வாழ்வின் வண்ணங்களென்றால், எண்ணங்களை வடிவமைத்து தன்வயப்படுத்துவதால் மட்டுமே வண்ணமயமான வாழ்வுக்கு வித்திட முடியும். இந்த வாழ்வியல் தத்துவத்தையே “எண்ணங்கள் ஒரு கண்ணாடி, “ என்ற தனது அற்புதப் படைப்பின் ஒவ்வொரு தலைப்பிலும் விவாதப் பொருளிலும் அடிநாதமாக வைத்திருக்கிறார் நூலின் ஆசிரியர் பரமகுரு கந்தசாமி அவர்கள்.
வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம், அழகு-அருவருப்பு போன்ற பக்க விளைவுகளின் வாழ்வியல் மூலகாரணங்களையே தனது தலையாய விவாதப் பொருளாக ஒவ்வொரு தலைப்பிலும் அத்தியாயத்திலும் வைத்திருப்பது அவரது ஆழ்ந்து தெளிந்த சிந்தனை ஓட்டங்களை நமக்கு வெளிக்காட்டுகிறன. ‘எண்ணங்களுக்கு வயதில்லை’, ‘கடலைக் கடக்கும் எண்ணப் பறவை’, ‘பிரபஞ்சம் கொடுத்த வீரவாள்’, போன்ற தலைப்புகள் பல்லாயிரம் வாழ்வியல்.காம் வாசகர்களால் மெச்சப்பட்டு வாசிக்கப்பட்ட கட்டுரைகள்.
“எண்ணங்கள் ஒரு கண்ணாடி, “ பெரியவர்கள் இளையோர், பயிற்சியாளர்கள் என அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய நூல்
₹120.00
எண்ணங்கள் ஒரு கண்ணாடி
‘எண்ணங்கள் ஒரு கண்ணாடி’ நூலின் ஆசிரியர் பரமகுரு கந்தசாமி வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் வாசிக்கப்பட வேண்டியவராகவும் கவனிக்கப்பட வேண்டியவராகவும் இருக்கிறார் என்பதை அவரது எண்ணங்களும் எழுத்துக்களுமே கண்ணாடியாக நமக்கு பிரதிபலிக்கின்றன. வளரும் தலைமுறையினருக்கு சவால் விடும் உயரிய கருத்துரையாளராகவும் தனது வாசகர்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய வலிமை படைத்த எழுத்தாளராகவும் மிளிர்கிறார்.
வாழ்வியல்.காம் ( http://vazhviyal.com/ ) என்ற இணைய தளத்தில் கடந்த சில மாதங்களாக ‘எண்ணங்கள் ஒரு கண்ணாடி’ என்று தலைப்பிட்டு அவர் எழுதிய ஒவ்வொரு கட்டுரையும் பலராலும் மிகவும் விரும்பப்பட்டு வாசிக்கப்பட்டது. வாழ்வியல்.காம் தளத்தின் மிகவும் கொண்டாடப்பட்ட, ரசிக்கப்பட்ட கட்டுரைகள் இவர் எழுதியவை. வார முழுவதும் சோர்ந்து தளர்ந்து போயிருக்கும் நேரத்தில் இவரது எழுத்துக்கள் வாசகர்களுக்கு உற்சாகமூட்டுபவையாக அவர்களுக்கு அமைந்தன.
வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம், அழகு-அருவருப்பு போன்ற பக்க விளைவுகளின் வாழ்வியல் மூலகாரணங்களையே தனது தலையாய விவாதப் பொருளாக ஒவ்வொரு தலைப்பிலும் அத்தியாயத்திலும் வைத்திருப்பது அவரது ஆழ்ந்து தெளிந்த சிந்தனை ஓட்டங்களை நமக்கு வெளிக்காட்டுகிறன. ‘எண்ணங்களுக்கு வயதில்லை’, ‘கடலைக் கடக்கும் எண்ணப் பறவை’, ‘பிரபஞ்சம் கொடுத்த வீரவாள்’, போன்ற தலைப்புகள் பல்லாயிரம் வாழ்வியல்.காம் வாசகர்களால் மெச்சப்பட்டு வாசிக்கப்பட்ட கட்டுரைகள்.
உள்மனதில் கரைபுரண்டோடும் எண்ணங்களே வாழ்வின் புறத்தில் கட்புலனாகும் வண்ணங்களாய் வெளிப்படுகின்றன. இந்த எண்ணங்களே வாழ்வின் வண்ணங்களென்றால், எண்ணங்களை வடிவமைத்து தன்வயப்படுத்துவதால் மட்டுமே வண்ணமயமான வாழ்வுக்கு வித்திட முடியும். இந்த வாழ்வியல் தத்துவத்தையே “எண்ணங்கள் ஒரு கண்ணாடி, “ என்ற தனது அற்புதப் படைப்பின் ஒவ்வொரு தலைப்பிலும் விவாதப் பொருளிலும் அடிநாதமாக வைத்திருக்கிறார் நூலின் ஆசிரியர் பரமகுரு கந்தசாமி அவர்கள்.
எளிய வார்த்தைகளில் ஆழமான வாழ்வியல் கூறுகளை எடுத்துச் சொல்வதில் இக்கால இளையோரின் மனதை ஆக்கிரமித்துள்ளார் ஆசிரியர். மேலோட்டமான வாழ்விலிருந்து மேலெழும் உள்ளார்ந்த உயரிய பொருள்பொதிந்த வாழ்க்கைக்கு நம்மையெல்லாம் இட்டுச்செல்லத் துடிக்கும் எண்ணம் கொண்டவர் இந்நூலின் ஆசிரியர் பரமகுரு கந்தசாமி அவர்கள்.
தனிநபர் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி இளையோரை பக்குவப்பட்டவர்களாக மாற்றத் துடிக்கும் பயிற்சியாளர்கள், மன நல ஆலோசகர்கள், வழிநடத்தும் ஆசிரியர்கள் நிச்சயம் இந்நூலை இளைய தலைமுறையை நெறிப்படுத்தப் பயன்படுத்தலாம்.
“எண்ணங்கள் ஒரு கண்ணாடி, “ பெரியவர்கள் இளையோர், பயிற்சியாளர்கள் என அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய நூல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
User Reviews
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.