இனையம் காக்க இணைவோம்
Inaiyam Kaakka Inaivom இனையம் காக்க இணைவோம் என்ற புத்தகம் மக்கள் போராட்டங்களை அரச பயங்கரவாதத்தினாலும் துப்பாக்கிகளாலும் அடக்குமுறைகளாலும் அடக்கிவிடலாம் என்று அதிகாரம் படைத்தோரும் பன்னாட்டு முதலாளிகளும் திட்டமிட்டு செயல்படுத்திவருவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இனையம் சரக்குப்பெட்டக மாற்றுமுனைய துறைமுகத்திற்கு எதிரின போராட்டம் துவங்கியதிலிருந்து அது கைவிடப்பட்டதுவரை உள்ள ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்கிறது இப்புத்தகம்.
கன்னியாகுமரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்திற்கும் எத்தனை துப்பாகிகளைக் கொண்டு துழைத்தாலும் மக்கள் சக்தியின்முன் எதுவும் செய்துவிட முடியாது என்று போராடும் அனைத்து மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் புத்தகம் இது.
மக்கள் சக்தி வென்றே தீரும் எனக் களம் காணத்துடிக்கும் ஒவ்வொரு புரட்சியாளன் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம்.
₹150.00
Inaiyam Kaakka Inaivom இனையம் காக்க இணைவோம் என்ற புத்தகம் மக்கள் போராட்டங்களை அரச பயங்கரவாதத்தினாலும் துப்பாக்கிகளாலும் அடக்குமுறைகளாலும் அடக்கிவிடலாம் என்று அதிகாரம் படைத்தோரும் பன்னாட்டு முதலாளிகளும் திட்டமிட்டு செயல்படுத்திவருவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. தூத்துக்குடி போராட்டமும், நெடுவாசல் போராட்டமும், மெரினா போராட்டமும் , சேலம் பசுமைச்சாலைக்கு எதிரான போராட்டமும் இதைத்தான் வெட்ட வெளிச்சமிடுகின்றன.
குமரி மாவட்டத்திலும் சரக்குப்பெட்டக துறைமுகத்திற்கு எதிரான போராட்டங்களிலும் இது திட்டமிட்டு செயல்படுத்த முயன்றனர். ஆனால் குமரி மாவட்ட மக்கள் தங்கள் சமயோஜித அறிவால் அதை முறியடித்தனர். போராடுகின்ற யாரையும் நகரத்திற்குள்ளோ மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு முன்போ அனுமதிக்கக் கூடாது என்று திட்டமிட்டனர். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று நடத்தப்பட்ட போராட்டங்களை சீர்குலைக்கவும், அதில் புகுந்து கலவரத்தை உருவாக்கவும் காவல்துறை -மக்கள் மோதலாக மாற்றி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லவும் திட்டமிட்டனர். அதற்காக மக்கள் போராட்டம் அறிவிக்கும்போதெல்லாம் முந்தினநாள் பந்த் அறிவிப்பதும் போராடும் மக்களை தேசத் துரோகிகளாக, சமூக விரோதிகளாக வெளிநாட்டு கைக்கூலிகளாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டுவதும் மக்கள் போராட்ட சுவரொட்டிகளை கிழித்தெறிவதும், தனியார் வாகன உரிமையாளர்களை போராட்டத்திற்கு மக்களை ஏற்றிக்கொண்டு வரக்கூடாது மீறி வந்தால் வாகனங்களை உடைப்போம் என்று மிரட்டுவது அப்படியே போராட்டம் நடந்தாலும் போராட்டத்திற்குள் புகுந்து கலவரம் ஏற்படுத்துவது, அரசுவாகனங்களை இயக்காமல் மக்களை சிறைவைப்பது, இந்து மதத்திற்கு வலுக்கட்டாயமாக ஒருசிலரை இழுத்து வந்து மதக்கலவரத்தை உருவாக்குவது மீனவத்தலைவர்கள் என்று தங்களை ஊடகங்களின்முன் காட்டிக்கொள்ளும் ஒருசிலருக்கு பணம் கொடுத்து விலைபேசுவது, தொண்டு நிறுவனங்கள் மூலம் லோண் தருகிறோம் என்று அப்பாவி மக்களை ஏமாற்றி அழைத்துவந்து துறைமுகத்திற்கு ஆதரவாக பேசவைப்பது, தலைக்கவசம் இல்லாமலும் குடித்துக்கொண்டும் வண்டி ஓட்டுபவர்களை காவல்துறை பிடித்தால் உடனடியாக விடுவிப்போம் என்று சொல்லி ஒருசில இளைஞர்களுக்கு வலைவீசி அவர்களுக்கு திருநீறு பூசி கட்சியில் சேரவைப்பது என்று அனைத்து தகிடுதத்த வேலைகளை செய்து வந்தனர். இவை அனைத்தையும் முறியடித்து வெற்றிகொண்ட கள அனுபவங்களை விளக்கும் புத்தகம் இனையம் காக்க இணைவோம்
இனையம் சரக்குப்பெட்டக மாற்றுமுனைய துறைமுகத்திற்கு எதிரின போராட்டம் துவங்கியதிலிருந்து அது கைவிடப்பட்டதுவரை உள்ள ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்கிறது இப்புத்தகம்.
எனது தலையே போனாலும் எனது உயிரே போனாலும் இனையத்தில் துறைமுகத்தைக் கொண்டுவந்தே தீருவேன். அப்படி இனையத்தில் துறைமுகம் அமையாவிட்டால் எனது அமைச்சர் பமவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜேபியினருடன் சேர்ந்து போராட்டம் நடத்துவேன் என்று பிட்னஸ் சவால் செய்த மத்திய அமைச்சரின் சவாலை முறியடித்த மக்கள் சக்தியின் வலிமையை வெளிப்படுத்தும் புத்தகம். சட்டமன்ற உறுப்பினர்களின் குறிப்பாக மனோ தங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோரின் திட்டமிட்ட செயல்பாடுகளையும் டெல்லிவரை சென்று கப்பல்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து இந்தத் துறைமுகத்தால் குமரி பாவட்டமே அழிவிற்குள்ளாகும் நிலையை விளக்கி கப்பல்துறை செயலாளரை மாவட்டத்திற்கு அழைத்துவந்து நிலமையை நேரில் விளக்கி துறைமுகத்தைக் கைவிபச்செய்த சாதனையை சொல்லும் புத்தகம் இது.
கன்னியாகுமரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்திற்கும் எத்தனை துப்பாகிகளைக் கொண்டு துழைத்தாலும் மக்கள் சக்தியின்முன் எதுவும் செய்துவிட முடியாது என்று போராடும் அனைத்து மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் புத்தகம் இது.
மக்கள் சக்தி வென்றே தீரும் எனக் களம் காணத்துடிக்கும் ஒவ்வொரு புரட்சியாளன் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம்.
Specification: இனையம் காக்க இணைவோம்
|
User Reviews
Only logged in customers who have purchased this product may leave a review.
Vendor Information
- Address:
- 4.84 rating from 61 reviews
There are no reviews yet.